Samantha is undergoing Ayurvedic treatment

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது 'சாகுந்தலம்', 'குஷி'படங்களில் நடிக்கிறார். அவரின் யசோதா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

Advertisment

இதனிடையே, மயோடிசிஸ் என்ற தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடையப் போராடி வருவதாக சமந்தா தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து "உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் இல்லை. இது ஒரு போர்க்களம். நான் போராடி வருகிறேன்" என உருக்கமாக கண்கலங்கியபடி ஒரு பேட்டியில் பேசினார். பின்பு சமந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் அவரது செய்தித்தொடர்பாளர் இது வெறும் வதந்தி தான் அவர் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

Advertisment

இந்நிலையில், சமந்தா தனது வீட்டில் ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிகிச்சையின் மூலம் நல்ல பலன் கிடைத்துள்ளதாகவும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகி இருப்பதாகவும் கூறப்படுகிறது.