Advertisment

"பெண்களை மட்டமாக எடை போடுவதை நிறுத்துங்கள்" - சமந்தா பதிலடி

samantha talks about women dress

நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். கடந்த 2017ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்துகொண்ட சமந்தா, கடந்த ஆண்டு அவரைவிவாகரத்து செய்தார்.இதனைத்தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் சமந்தா சமீபத்தில் கருப்பு பச்சை உடையணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது பெரும் வைரலாகியநிலையில் பலரும் சமந்தாவின் ஆடை குறித்து விமர்சித்து வந்தனர்.

Advertisment

இந்நிலையில் இதற்குபதிலளித்துள்ள சமந்தா, "பெண்கள் அணியும் ஆடையை வைத்து அவர்களை மட்டமாக எடை போடுவதை முதலில் அனைவரும் நிறுத்த வேண்டும். பெண்களின் ஆடையை வைத்து அவர்களைத் தீர்மானிப்பது, அவர்களின் இனம், படிப்பு, சமூக அந்தஸ்து, நிறம் என ஒரு பெரிய பட்டியலேநீண்டு கொண்டிருக்கிறது. நாம்2022இல் இருக்கிறோம். பெண்கள் அணியும் ஆடைகள் குறித்து விமர்சிப்பதை விட்டுவிட்டு நம்மைமேம்படுத்துவதில் கவனம் செலுத்தினால் நன்றாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

samantha samantha Ruth Prabhu Womens
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe