Advertisment

“நான் பிரதமர் மோடியின் ஆதரவாளர்” - வைரலாகும் சமந்தாவின் வீடியோ

Advertisment

samantha talk about pm modi video goes viral

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா தற்போது யசோதா, சாகுந்தலம், குஷி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் இயக்கும் தளபதி 67 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிப்பதாக கூறப்படுகிறது. தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்த பிறகு சமந்தா பேசும் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

இந்நிலையில் நடிகை சமந்தா நான் பிரதமர் மோடியின் ஆதரவாளர் என்று கூறும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "நான் மோடிஜின் ஆதரவாளர். அவரின் செயல்பாடுகள் மகிழ்ச்சியை அளிக்கிறது" எனக் கூறியுள்ளார். இதே போன்ற மற்றோரு வீடியோவில், "நான் மோடியின் ஆதரவாளர். அவர் தலைமையில் நாடு பல மாற்றங்களை சந்தித்திருக்கிறது. அவர் பொருளாதாரம் உள்ளிட்ட விஷயங்களில் நாட்டை முன்னோக்கி எடுத்து செல்வார்" எனக் பேசியுள்ளார்.

இந்த வீடியோ கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகளுக்கு முன்பு சமந்தா பேசிய வீடியோ. பிரதமர் மோடி பொறுப்பேற்ற போது தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தியிருந்தார். அதற்காக சமந்தா பேசிய விடியோவைத்தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பலரும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

india pm narendra modi samantha samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Subscribe