Advertisment

"நன்றியுணர்வு நிறைந்து நிற்கிறேன்" - சமந்தா நெகிழ்ச்சி

samantha talk about 12 years cinema experience

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா கடந்த 2010 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தில் ஒரு சிறிய கட்சியில்நடித்திருந்தார். ஆனால் இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஏ மாயா சேசாவா' படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் சமந்தா முதன் முதலாக திரைத்துறையில் நடிகையாக அறிமுகமானார்.

Advertisment

இத்திரைப்படம் தன்னை விட மூத்த வயது பெண்ணை காதலிக்கும் ஒரு ஆணின் காதலை சித்தரிக்கும் வகையில் வெளியான இப்படம் இரு மொழிகளிலுமேபெரும் வெற்றி பெற்றது. இப்படம் வெளியாகி இன்றுடன்12 ஆண்டுகளைநிறைவு செய்துள்ளது. அத்துடன் நடிகை சமந்தாவும் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமாகி 12 ஆண்டுகளைநிறைவு செய்துள்ளார்.

Advertisment

இது குறித்துதனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள சமந்தா, "நான் திரைத்துறைக்கு வந்து இன்றுடன் 12 வருடங்கள் நிறைவடைகிறது. 'லைட்ஸ் கேமரா ஆக்‌ஷன்' என்ற வார்த்தைகளைச் சுற்றியும், ஒப்பற்ற தருணங்களைச் சுற்றியுமே இந்த 12 ஆண்டுகால நினைவுகள் அமைந்துள்ளன. ஆசிர்வதிக்கப்பட்ட இந்தப் பயணத்தில் இருப்பதிலும், உலகில் மிகச் சிறந்தவிஸ்வாசமான ரசிகர்களைப் பெற்றதாலும் நன்றியுணர்வு நிறைந்து நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

gautham menon vinnaithandivaruvaya samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe