Advertisment

சினிமாவிலிருந்து விலகும் சமந்தா?

Samantha to take a Long Break in acting

Advertisment

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் சமந்தா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாததால் அவர் ஒப்பந்தமாகியுள்ள படங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் சமந்தா நடித்து வந்த விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்படக்குழு அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும், அதில் சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமெடுக்கவுள்ளதாகவும் அதனால் சமந்தா வருகைக்கு படக்குழு காத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சமந்தா இந்தியில் இரண்டு படங்கள் ஒப்பந்தமாகியுள்ளதாகவும், அப்படக்குழுசமந்தாவை படப்பிடிப்புக்கு அழைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால் சமந்தா தசை அலர்ஜி நோய் முழுமையாகக் குணமடையும் வரை எந்தப் படங்களிலும் கலந்து கொள்ளாதவாறு முடிவெடுத்துள்ளதாகவும் அதன் காரணமாக தன்னால் வரமுடியாது எனவும் கூறியுள்ளாராம். மேலும் குணமடைந்த பிறகு சினிமாவை விட்டு சிறிது காலம் விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாக திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இதனால் படக்குழு சமந்தா கதாபாத்திரத்தில் வேறு நடிகையை நடிக்க வைக்க யோசித்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe