samantha switzerland Snow ride video goes viral

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, தற்போது இயக்குநர்விக்னேஷ் சிவன் இயக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துவருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பை நிறைவுசெய்த படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.இப்படத்தை தொடர்ந்து நடிகை சமந்தா 'யசோதா' திரைப்படத்தில் நடித்துவருகிறார். இயக்குநர்கள் ஹரி ஷங்கர் மற்றும் ஹரி நாராயணன் இருவரும் இணைந்து இப்படத்தைஇயக்குகின்றனர்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்துக்கு இன்ப சுற்றுலா சென்றுள்ள நடிகை சமந்தா அங்கு பனிச்சறுக்குசெய்யும் வீடியோவைதனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட்களை தெறிக்கவிட்டு வைரல் செய்து வருகின்றனர்.