Advertisment

இரண்டாம் பாதிக்கு தயாராகும் சமந்தா 

samantha

திருமணத்திற்கு பிறகு யாரும் எதிர்பாரத விதமாக வெற்றிகரமான நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சமந்தா அடுத்தடுத்து ரங்கஸ்தலம், இரும்புத்திரை மற்றும் நடிகையர் திலகம் படங்களின் வெற்றி மூலம் ஆண்டின் முதல் பாதியில் தன் மார்க்கெட்டை இன்னமும் உச்சத்தில் வைத்துள்ளார். இந்நிலையில் இவர் அடுத்ததாக சூப்பர் டீலக்ஸ், சீமராஜா, யு டர்ன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் 'சூப்பர் டீலக்ஸ்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துவிட்ட நிலையில், நடிகை சமந்தா இப்படத்தின் டப்பிங் பணியை துவங்கியதன் மூலம் ஆண்டின் இரண்டாம் பாதியை வெற்றியுடன் முடிக்க தற்போது ஆயத்தமாகியுள்ளார். வேம்பு என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருக்கும் இப்படத்தில் ஷில்பா என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இவர்களுடன் பகத் பாஷில், காயத்ரி சங்கர், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் 'ஆரண்யகாண்டம்' தியாகராஜன் குமாரராஜா இயக்கும் இப்படத்திற்கு மிஷ்கின், நலன் குமாரசாமி மற்றும் நீலன் சேகர் இணைந்து திரைக்கதை எழுதியிருக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை வரும் அக்டோபர் மாதம் இப்டத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளனர்.

Advertisment
nadigaiyarthilagam mahanati samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe