/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/samanthaa.jpg)
நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்துவருகிறார். இவர் தமிழில் 'மெர்சல்', 'கத்தி', 'தெறி', 'இரும்புத்திரை' உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். தமிழைப் போலவே தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களைக் கொடுத்துள்ளார். இயக்குநர்விக்னேஷ் சிவன் இயக்கம் ‘காத்துவாக்குலரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்துவருகிறார்.சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவைசமந்தா விவாகரத்து செய்தார். இது திரையுலகினர் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இருப்பினும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க சமந்தா ஒப்பந்தமாகிவருகிறார்.
அந்தவகையில்நடிகை சமந்தாஃப்ரென்ச் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இயக்குநர் ஃபிலிப் ஜான் இயக்கும் 'அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்'என்ற நாவலை தழுவி எடுக்கப்படும் படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதில் அவர், முற்போக்கான தமிழ் , இருபாலின ஈர்ப்பாளர் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை குரு பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இது தொடர்பாக நடிகை சமந்தா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "‘அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ்'வில் ஒரு அங்கமாக இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இதற்கு வாய்ப்பளித்த இயக்குநர் ஃபிலிப் ஜானுக்கு நன்றி" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Follow Us