Advertisment

பிரபல இயக்குநருடன் சமந்தா டேட்டிங்

samantha shares pics with raj nidimoru amid dating rumours

சமந்தா, தற்போது ‘ரக்த் பிரம்மாந்த்’(Rakht Brahman) என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதனிடையே ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இதன் மூலம் ‘சுபம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தை வசந்த் மரிகாந்தி எழுதியிருக்க பிரவீன் கேண்ட்ரெகுலா இயக்கியுள்ளார். இதில் ஹர்ஷித் மல்கிரெட்டி, ஷ்ரேயா கோந்தம், சரண் பெரி, ஷாலினி கோண்டேபுடி, கவிரெட்டி ஸ்ரீனிவாஸ் மற்றும் ஷ்ரவாணி உள்ளிட்ட ஆறு பேர் நடித்துள்ளனர். ஷோர் போலீஸ் என்பவர் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியானது. படம் நாளை(09.05.2025) வெளியாகவுள்ளது. இதனால் படக்குழுவினர் சமீப வாரங்களாக புரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.

Advertisment

இந்த நிலையில் சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பட புரொமோஷன் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் ஒரு பதிவில், பாலிவுட் இயக்குநர் ராஜ் நிதிமோருவோடு இருக்கும் செல்ஃபி புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். மேலும் அவரது புகைப்படம் ஒன்றை தனியாகவும் பகிர்ந்திருந்தார். சமந்தா இவர் இயக்கத்தில் ‘தி ஃபேமிலி மேன்’, ‘சிட்டாடெல்’ உள்ளிட்ட வெப் தொடர்களில் நடித்திருந்தார். இப்போது ‘ரக்த் பிரம்மாந்த்’ வெப் தொடரில் நடித்து வ்ருகிறார்.

Advertisment

samantha shares pics with raj nidimoru amid dating rumours

சமீப காலமாக சமந்தாவும் இயக்குநர் ராஜூவும் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது. முதலில் இருவரும் கடந்த பிப்ரவரியில் நடந்த உலக பிக்கல் பால் லீக் போட்டியில் ஒன்றாக கலந்து கொண்டனர். அப்போது சமந்தா, ராஜ் கையை பிடித்து கொண்டு நடந்து சென்றார். இதனால் இருவரும் டேட்டிங் செய்து வருவதாக சொல்லப்பட்டது. பின்பு இருவரும் திருப்பதி கோயிலில் ஒன்றாக சென்று சாமி தரிசனம் செய்தனர். இதனால் டேட்டிங் தகவல் தீயாய் பரவ, இருவரும் அது குறித்து வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. இப்போது மீண்டும் ராஜுடன் இருக்கும் புகைப்படத்தை சமந்தா பகிர்ந்ததால் மீண்டும் டேட்டிங் தகவல் உலா வர தொடங்கியுள்ளது.

director samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe