Advertisment

“அந்த படம் ரிலீஸானப்போ நீங்களெல்லாம் எங்க இருந்தீங்க”- சமந்தா

கௌதம் மேனனின் ‘யே மாய சேஸாவே’ என்னும் தெலுங்கு படத்தின் மூலம் சமந்தா ஹீரோயினா அறிமுகமாகினார். இது தமிழில் சிம்பு, த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கௌதம் இயக்கிய ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தின் தெலுங்கு பிரதி. அதில் சிம்பு கதாபாத்திரத்தில் நாக சைத்தன்யா, த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருப்பார்கள். தமிழில் எந்தளவிற்கு இப்படம் ஹிட் அடித்ததோ அதேபோல தெலுங்கிலும் வேறு லெவலுக்கு ஹிட் அடித்தது.

Advertisment

samantha

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் நேற்று இவ்விரண்டு படங்களும் வெளியாகி 10 வருடங்களை கடந்திருப்பதை தமிழ், தெலுங்கு சினிமா ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடினர். இந்நிலையில் கௌதம் மேனனிடம் இருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள் என்ற கேள்விக்கு ஒரு பேட்டியில் பதிலளித்துள்ளார். அதில், “கௌதம் மேனனுக்கு கட் சொல்வதே பிடிக்காது. கேமரா ஆனிலேயே இருக்கு, தொடர்ந்து பதிவு செய்துகொண்டே இருப்பார். யே மாய சேஸாவில் நடிக்கும்போது சுத்தமாக தெலுங்கு தெரியாது.

கௌதம் மேனனிடமிருந்து கற்றது, சீனில் எதுவும் செய்யாமல் இருப்பது எப்படி என்பதுதான். அதற்கு நிறைய தன்னம்பிக்கை தேவை. ரசிகர்கள் நம் ஆன்மாவைப் பார்க்க வைக்க வேண்டும் என்பது முக்கியம். கௌதம் மேனன் எனக்கு அதைக் கற்றுக்கொடுத்தார். இதைச் செய்வது கடினம். கேமரா இருப்பதை மறக்க முடியாது. ஆனால், அது இல்லாதது போல நடிக்க வேண்டும்.

நான் டயலாக் பேசுவதிலேயே கவனமாக இருந்தேன். வேகமாக என் டயலாக்கை பேசிவிட்டு காட்சி முடித்துவிட்டதாக நினைப்பேன். கௌதம்தான் காட்சி என்பது வசனம் பேசுவது அல்ல என்பதை எனக்குக் கற்றுத் தந்தார். நீங்கள் பேசுவதற்கு நடுவில் இருக்கும் இடைவெளிதான் முக்கியம் என்பதைப் புரிய வைத்தார். அவர் இயக்கத்தில் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தில் மீண்டும் நடிக்கும்போது எளிதாக இருந்தது.

ஒவ்வொரு வருடமும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் தெலுங்குப் பதிப்பு வெளியான நாளில் ரசிகர்கள் எனக்குச் செய்திகள், வாழ்த்துகள் அனுப்புவார்கள். படம் வெளியானபோது நீங்களெல்லாம் எங்கு இருந்தீர்கள் என்று எனக்குத் தோன்றும்” என்றார்.

gautham menon samantha
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe