குணசேகர் இயக்கத்தில் சமந்தா, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், மோகன்பாபு, கபீர் சிங், மதுபாலா உள்ளிட்ட பலர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் உருவாகி வருகிறது. காளிதாஸ் எழுதிய புராணக்கதையான சகுந்தலா கதையை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. நீலிமா குணா தயாரிக்க மணி ஷர்மா இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ள இப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. மயில்கள், வாத்துகள், மற்றும் மான்களுக்கு இடையே வெள்ளை நிற உடையில் நடிகை சமந்தா காட்சியளிக்கும் இந்தப் போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.