Advertisment

சத்குருவை சந்தித்த சமந்தா!

samantha

Advertisment

தமிழில் ஹீரோயினாக அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து, பின் தமிழ் சினிமாவிலும் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்ட்வந்தவர் சமந்தா. தற்போது இரண்டு மொழி திரைத்துறையிலும் முன்னணி நடிகையாக பிஸியாக இருக்கிறார்.

விஜய் சேதுபதி நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடிக்கின்றனர். ‘தி ஃபேமிலி மேன் 2’ என்னும் பிரபல வெப் சிரீஸில் முக்கிய கதாபாத்திரத்தில் சமந்தா நடித்து வருகிறார்.

அண்மையில் சத்குருவைச் சந்தித்த நடிகை சமந்தா, அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த சந்திப்பு குறித்து அதில், “ஆன்மீக செயல்முறையின் முழு பயிற்சி என்பது நீங்கள் உங்களுக்குள் வரையப்பட்ட எல்லைகளை உடைத்து மகத்தான அனுபவத்தை அனுபவிப்பதே ஆகும். ஆன்மீகத்தின் நோக்கம் என்பது உங்கள் அறியாமையின் விளைவாக நீங்கள் உருவாக்கி வரையறுக்கப்பட்ட அடையாளத்திலிருந்து உங்களை நீங்களே உருவாக்கிக் கொண்டு வாழ்வதுதான். இது ஆனந்தமான ஒரு எல்லையற்ற பொறுப்பு.

Advertisment

அறிவு மட்டும் சாதனை அல்ல. உங்களது புலன்கள் அனைத்து ஒரு வெளிப்புற தோற்றத்தைதருகின்றன. ஆனால் உண்மையான வெளிப்புறத்தை நீங்கள் ஒருபோதும் அனுபவித்திருக்க மாட்டீர்கள். நீங்கள் அனுபவிக்கும் அனைத்தும் உங்களுக்குள் இருப்பதை நீங்கள் உணரும்போது நீங்கள் உண்மையாகவே அறிவு ஒளியைப் பெற்றுள்ளீர்கள் என்று அர்த்தம்” என்று பதிவிட்டுள்ளார்.

samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe