சமந்தா, தற்போது ‘ரக்த் பிரம்மாந்த்’(Rakt Brahmand) என்ற இந்தி வெப் தொடரில் நடித்து வருகிறார். மேலும் ‘பங்காரம்’ என்ற தெலுங்கு படத்தில் லீட் ரோலில் நடித்து வருகிறார். இதனிடையே ‘டிராலாலா மூவிங் பிக்சர்ஸ்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார். இதன் மூலம் ‘சுபம்’ என்ற தலைப்பில் ஒரு படத்தை தயாரித்திருந்தார். இப்படம் கடந்த மே மாதம் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் சமந்தா தனது வாழ்க்கையில் புது முடிவு எடுத்துள்ளார். இதனை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “இனிமேல் எனக்கு ஆர்வம் இருக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளேன். இதில் உடற்பயிற்சி மற்றும் திரைப்படங்கள் இரண்டும் அடங்கும். நான் இப்போது சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருகிறேன். ஆனால் அவை அனைத்தும் எனக்கு பிடித்தமானவை அல்ல. அதனால் இனிமேல் நான் செய்யும் ஒவ்வொரு விஷயமும்... நான் தயாரிக்கும் படங்கள் தொடங்கி நான் முதலீடு செய்யும் பிஸ்னஸ் முதல் எல்லாமுமே முழு மனதுடன் செய்யப்போகிறேன்.
நான் இனி ஒரே நேரத்தில் ஐந்து படங்களில் நடிக்கப்போவதில்லை. நான் என் உடல்நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும். அதை உணர்ந்ததால், என்னுடைய வேலையை நான் குறைக்க விரும்புகிறேன். புராஜெக்டுகளின் எண்ணிக்கை குறையலாம். ஆனால் அதனுடைய தரம் நிச்சயம் அதிகரிக்கும்” என்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/08/21/19-2025-08-21-13-16-27.jpg)