Skip to main content

சமந்தா மருத்துவமனையில் அனுமதியா? - வெளியான உண்மை

Published on 24/11/2022 | Edited on 24/11/2022
Samantha Ruth Prabhu hospitalised in Hyderabad after Myositis diagnosis manager explained

 

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா தற்போது 'சாகுந்தலம்', 'குஷி' மற்றும் 'யசோதா' படத்தில் நடிக்கிறார். இதில் யசோதா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இதனிடையே, சமீபத்தில்தான் தசை அலர்ஜி மயோடிசிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடையப் போராடி வருவதாகவும் விரைவில் நான் பூரண குணமடைவேன் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்கள் எனவும் தெரிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது. மேலும், இது தொடர்பாக திரைப் பிரபலங்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறினர்.

 

இதனைத்தொடர்ந்து அண்மையில் ஒரு பேட்டியில், "உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் இல்லை. இது ஒரு போர்க்களம். நான் போராடி வருகிறேன்" என உருக்கமாக கண்கலங்கியபடி பேசினார். இந்நிலையில் சமந்தா நேற்று (23.11.2022) உடல்நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. இந்த தகவல் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

 

இது தொடர்பாக சமந்தாவின் செய்தித்தொடர்பாளர் ஒரு ஆங்கில ஊடகத்தில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், "சமந்தா வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு இருக்கிறார். அவர் ஹைதராபாத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற தகவலை நம்பவேண்டாம். அது வெறும் வதந்தி தான்" எனப் பேசியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து போலி வீடியோ பரப்பிய நபர் சரண்!

Published on 18/03/2023 | Edited on 18/03/2023

 

The person who spread the fake video about the laborer n poilice custody!

 

பீகாரைச் சேர்ந்த தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்பட்டதாக அண்மையில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று வெளியாகியது. அதனைத் தொடர்ந்து பல்வேறு வீடியோக்கள் வெளியாகின. மேலும், பீகார் மாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து பீகாரில் பாஜக எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏக்கள் குழு தமிழகத்திற்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விளக்கமளித்து பேசிய பீகார் மாநில துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், “தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக கூறப்படும் செய்திகளை தமிழக டி.ஜி.பி. நிராகரித்துள்ளார். உறுதிப்படுத்தப்படாத விவகாரங்களை பாஜக விவாதிக்கிறது” என்று பேசினார். 

 

அதனைத் தொடர்ந்து பீகாரில் இருந்து வந்த குழு ஒன்று இங்கு வெளிமாநிலத் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களின் பாதுகாப்பைப் பற்றி கேட்டறிந்தது. மேலும், வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டிருந்தது. 

 

தமிழ்நாடு காவல்துறை வெளிமாநிலத் தொழிலாளிகள் தாக்கப்படுவதாக போலி வீடியோக்களை பதிவிட்டவர்களை சைபர் க்ரைம் பிரிவினருடன் இணைந்து கண்டறிந்து கைது செய்து வந்தது. அதேபோல், பீகார் அரசும் போலி வீடியோக்கள் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுத்து வந்தது. இந்நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி வீடியோ பரப்பிய வழக்கில் தேடப்பட்டு வந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் இன்று பீகார் மாநிலம் ஜகதீஷ்பூர் காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். 

 

 

Next Story

ஹேராம் பட நடிகர் மறைவு? - ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மனைவி

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

Vikram Gokhale wife Rejects Actor passed away Rumours

 

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகலே. இவர் தமிழில் கமல்ஹாசனின் 'ஹே ராம்' படத்தில் நடித்துள்ளார். மேலும் மராத்தி, இந்தி,தெலுங்கு, உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபலமானார். கடந்த 5 ஆம் தேதி புனேவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. சிறுநீரகம், இருதயம் போன்ற உறுப்புகளின் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக சிகிச்சை பெற்று வந்த இவர் நேற்று மாலை கோமா நிலைக்குச் சென்றதாகச் சொல்லப்பட்டது. 

 

இதனைத் தொடர்ந்து, நேற்று இரவு விக்ரம் கோகலே காலமானதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில், விக்ரம் கோகலே மனைவி கணவர் இறந்ததாக வெளியான செய்தியை மறுத்துள்ளார். மேலும், கடந்த 24 மணிநேரத்தில் இருந்து விக்ரம் கோகலே இக்கட்டான சூழ்நிலையில் உள்ளதாகவும், மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அவருக்கு பல உறுப்புகள் செயலிழந்துள்ளதால் மருத்துவர்களின் சிகிச்சைக்கு அவரது உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 

77 வயதான விக்ரம் கோகலே இறந்ததாக வெளியான செய்தி பலரையும் வருத்தத்தில் ஆழ்த்திய நிலையில் அவரது மனைவி தற்போது அதனை மறுத்துள்ளது பலருக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும், அவர் பூரண குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.