Samantha reunites with Nagashitanya

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு ரீமேக்கில்நாக சைதன்யா மற்றும்சமந்தா முதல் முறையாக இணைந்து நடித்தனர். இதனைத்தொடர்ந்து சமந்தா - நாக சைதன்யா இருவரும் இணைந்து 'மனம்', 'ஆட்டோ நகர் சூர்யா' போன்ற படங்களில் நடித்திருந்த நிலையில் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அதன் பிறகு ஏற்பட்ட சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தங்கள் விவகாரத்தை அறிவித்து பிரிந்தனர்.

Advertisment

இந்நிலையில் இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சமந்தாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நந்தினி ரெட்டி இயக்கும் புதிய படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நந்தினி ரெட்டி இயக்கத்தில் சமந்தா நடிப்பில் வெளியான ஓ பேபி படத்தில் நாகசைதன்யா கௌவரவ தோற்றத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் இப்படத்தின் மூலம் இணைய உள்ளார்கள். விவகாரத்திற்கு பிறகு சமந்தா - நாக சைதன்யா இருவரும் இணைந்து நடிக்கவுள்ளதாக கூறப்படும் தகவல் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Advertisment