"விவாகரத்து பண்ணிடுங்க" என்ற ரசிகருக்கு சமந்தாவின் ஜாலி பதில்!

samantha

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகவலம் வருபவர்சமந்தா. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகரானநாகார்ஜூனாவின் மகனும், நடிகருமான நாகசைதன்யாவை காதலித்துத் திருமணம் செய்துகொண்ட சமந்தா,திருமணத்திற்குப் பிறகும்நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா, இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை அடிக்கடி பதிவிடுவார். அதேபோல்இன்றும்தனதுபோட்டோஷூட்புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டிருந்தார். அதில், ரசிகர் வைத்த கோரிக்கையும், அதற்குச் சமந்தாஅளித்தபதிலும்தற்போது வைரலாகி வருகிறது.

சமந்தாபதிவிட்ட அப்புகைப்படத்தில், அந்த ரசிகர், நீங்கள் விவாகரத்துச் செய்துவிடுங்கள். நாம் இருவரும்திருமணம் செய்துகொள்ளலாம் எனசோகஎமோஜிகளோடு தெலுங்கில்கமெண்ட்செய்திருந்தார். அதற்குச் சமந்தாவும் தெலுங்கில், "அது கடினம், நாகசைதன்யாவிடம் வேண்டுமானால் கேட்டுப்பாருங்கள்" எனப் பதிலளித்துள்ளார். சமந்தாவின் இந்தப் பதில் தற்போது வைரலாகி வருகிறது.

samantha
இதையும் படியுங்கள்
Subscribe