Advertisment

“நான் 2017-லிருந்து கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால்...”- ரசிகரின் கேள்விக்கு சமந்தா பதில்! 

samantha

Advertisment

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் சமந்தா, லாக்டவுன் சமயத்தில் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கின்றார். அவ்வப்போது தனது ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் கலந்துரையாடினார் சமந்தார். அப்போது, பல கேள்விகளை கேட்டனர் ரசிகர்கள். சமந்தாவும் நகைச்சுவை கூடிய பதில்களை தெரிவித்தார்.

ரசிகர் ஒருவர், “ நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?” என்று கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த சமந்தா, “ஆமாம், நான் 2017ஆம் ஆண்டிலிருந்து கர்ப்பமாக இருக்கிறேன். ஆனால், அந்த குழந்தைதான் வெளியே வர விரும்பவில்லை போல” என்று நகைச்சுவையாக தெரிவித்துள்ளார்.

Advertisment

இதனை தொடர்ந்து அவர் நடிக்கும் வெப் சீரிஸ் குறித்தும், நாக சைத்தன்யா குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அனைத்திற்கும் பதிலளித்தார் சமந்தா.

samantha
இதையும் படியுங்கள்
Subscribe