Advertisment

"இடைவெளி இல்லா தாக்குதல்கள்; ஆனால், உடைந்து போகமாட்டேன்" - சமந்தா பதிவு!

samantha

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் திரைப்படங்களில் நடிப்பதை சமந்தா தொடர்ந்து வந்தார். சமீபகாலமாக சமந்தாவிற்கு நாக சைதன்யாவிற்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. தொடக்கத்தில் இதை இருவரும் மறுத்துவந்த நிலையில், கடந்த இரண்டாம் தேதி இருவரும் பிரிய உள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து, இவர்கள் விவகாரத்திற்கான காரணம் குறித்து சமூக வலைதளங்களில் பல விவாதங்கள் நடைபெற்று வந்தன. குறிப்பாக அவையனைத்தும் சமந்தாவை தாக்கியே இருந்தன. அத்தகைய விமர்சனங்களுக்கு சமந்தா ரசிகர்களும் பதிலடி கொடுத்துவந்தனர்.

Advertisment

இந்த நிலையில், தனக்கு ஆதரவாக நின்ற ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் சமந்தா ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அப்பதிவில், "என்னுடைய தனிப்பட்ட விவகாரத்தில் உளப்பூர்வமாக நீங்கள் காட்டிய அன்பு, எனக்கு மனநிறைவைத் தந்தது. என் மீது அனுதாபத்தை வெளிப்படுத்தியதற்கும் எனக்கெதிரான விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்ததற்கும் நன்றி. எனக்கு வேறொரு உறவு இருந்தது, குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை, நான் சந்தர்ப்பவாதி, தற்போது கருக்கலைப்பு செய்துள்ளேன் என்றெல்லாம் அவர்கள் கூறினார்கள். விவாகரத்து என்பதே வலிகள் நிறைந்த வழிமுறை. காலம் என்னைக் குணப்படுத்த என்னை தனியாக விடுங்கள். இந்தத் தாக்குதல் என் மீது இடைவெளி இல்லாமல் தொடுக்கப்பட்டது. இதுவோ, இவர்கள் கூறும் மற்ற விஷயங்களோ என்னை ஒருபோதும் உடைத்துவிடாது என உறுதியாகக் கூறுகிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe