samantha praised hanuman movie

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஹனுமான். தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர்.

Advertisment

இப்படம் கடந்த பொங்கலை முன்னிட்டு 12 ஆம் தேதி தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியிடப்பட்டது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் சமந்தா இப்படத்தை பாராட்டியுள்ளார்.

Advertisment

இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சிறந்த திரைப்படங்களை பார்க்கும் போது மீண்டும் குழந்தை போல் உணர்வோம். இப்படத்தில் நடிப்பு, இசை, காமெடி, என அனைத்தும் சேர்ந்து ஒரு மேஜிக் செய்துள்ளது. தேஜா சஜ்ஜா, நீ என்னை சர்பிரைஸ் செய்திருக்கிறாய். உன்னுடைய டைமிங் காமெடியும், அப்பாவித்தனமான நடிப்பும் ஹனுமந்தனுவாக நீ சிறப்பாக நடித்திருப்பதும், படத்தில்முக்கியமானதாக அமைந்துள்ளது” என குறிப்பிட்டு படக்குழுவினரை வெகுவாக பாராட்டியுள்ளார்