Advertisment

நான்காவது முறையாக மீண்டும் விஜய்க்கு ஜோடியாகும் சமந்தா

Samantha is paired with Vijay again for the fourth time

விஜய், 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'தளபதி 66' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய் ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. படத்தில் வரும் முக்கியமான காட்சியை இந்த படப்பிடிப்பில் முடித்துள்ளதாகவும் சமீபத்தில் படக்குழு அறிவித்தது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில் விஜய், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தாவை நடிக்க வைக்க படக்குழு முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா இதற்கு முன்னதாக விஜய்யுடன் 'கத்தி', 'தெறி' மற்றும் 'மெர்சல்' படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

Thalapathy67 lokesh kanagaraj samantha actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe