Advertisment

பிரபல நடிகருடன் இணைந்த சமந்தா ; உறுதிசெய்த படக்குழு

Samantha paired with famous actor; Confirmed film crew

'அர்ஜுன் ரெட்டி' படம் மூலம் பிரபலமான விஜய் தேவரகொண்டா. தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கும் 'லைகர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பான் இந்தியா படமாக ஆகஸ்ட் மாதம் 25-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. 'தர்மா புரொடக்ஷன்' தயாரிக்கும் இப்படத்தில் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன், ரோனித் ராய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரபல குத்துச்சண்டை வீரர் 'மைக் டைசன்' முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா அடுத்ததாக இயக்குநர் சிவ நிர்வாணா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க இருப்பதாக தகவல் வந்த நிலையில் தற்போது அது உறுதியாகியுள்ளது. இந்த படத்திற்கான பூஜை இன்று நடைபெற்றது. விஜய் தேவரகொண்டா, சிவ நிர்வாணா உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். இது குறித்தான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஹெஷாம் அப்துல் இசையமைக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

Advertisment

liger samantha Ruth Prabhu vijay devarakonda
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe