/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/115_10.jpg)
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சமந்தா, கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தார். இந்த விவகாரம், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமந்தா தொடர்ந்து படங்களில் நடிப்பாரா அல்லது சில காலம் திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருப்பாரா என்பது குறித்து பல கேள்விகள் நிலவிய நிலையில், நடிகை சமந்தா நடிக்கும் அடுத்த தமிழ்ப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, அறிமுக இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கும் படத்தில் சமந்தா நடிக்க உள்ளார். இப்படம் பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியார் பிக்சர்ஸின் 30ஆவது படமாக உருவாக உள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படம் தொடர்பான கூடுதல் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க உள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)