/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/samantha_25.jpg)
'பாகுபலி' படத்திற்குக்கிடைத்த பிரம்மாண்ட வெற்றி மற்றும் வரவேற்பையடுத்து, சரித்திர பின்னணி கொண்ட படங்களின் வருகை அதிகரித்துள்ளன. அந்தவகையில், சகுந்தலை புராணக் கதையானது திரைப்படமாகவுள்ளது. 'ருத்ரமா தேவி' படத்தின் இயக்குனர் குணசேகர் இப்படத்தை இயக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தில், சகுந்தலை கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடிக்க உள்ளார்.
இக்கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை அனுஷ்காவிடம் முதலில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து, நடிகை சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பானது விரைவில் தொடங்கவுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)