/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/45_21.jpg)
நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துவரும் 'காத்து வாக்குல ரெண்டு காதல்' படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பானது சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் சென்னையில் துவங்கியது. முதல் நாளில் நடிகர் விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன.
நடிகை நயன்தாரா, 'அண்ணாத்த' படத்திற்காக ஹைதராபாத் சென்றுள்ளதால் முதற்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் நடத்தி முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. நயன்தாரா ஒரே நேரத்தில் இவ்விரு படத்திலும் கவனம் செலுத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், ஹைதராபாத்தில் படக்குழுவினரோடு இணைந்த நடிகர் விஜய் சேதுபதியை, விக்னேஷ் சிவன் பூங்கொத்து கொடுத்து வரவேற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகியது. அந்த வகையில், நடிகை சமந்தாவும் தற்போது படக்குழுவினரோடு இணைந்துள்ளார். அவரை வரவேற்கும் காணொளியையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)