/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/14_102.jpg)
இந்தியாவின் 76வது சுதந்திர தின விழா நாளை (15.08.2023) கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி நியூயார்க்கில் இந்திய சங்க கூட்டமைப்பு (Federation of Indian Association) சார்பில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பேரணி இந்தாண்டும் வருகிற 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த 41வது சுதந்திர தின அணிவகுப்பில், நடிகை சமந்தா கலந்துகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமாக நடைபெறும் இவ்விழாவில் சமந்தாவோடு பாலிவுட் நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அந்த அணிவகுப்பில் கலந்து கொள்வதுகௌரவமாகப்பார்க்கப்படும் நிலையில் முன்னதாக அமிதாப் பச்சன், அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர். அந்த வகையில் சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
சமந்தா, விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' மற்றும் வருண் தவானின் 'சிட்டாடெல்' வெப் தொடர் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் 'குஷி' படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'சிட்டாடெல்' தொடர் முழுவீச்சில் தயாராகி வருகிறது. சமந்தாதனது தசை அலர்ஜி பிரச்சனைகாரணமாகசினிமாவில் இருந்து விலகி இருப்பதாகத்தெரியும் சூழலில், தற்போது வெளிநாடு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)