Advertisment

"உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் இல்லை" - கண்கலங்கிய சமந்தா

samantha interview goes viral on nternet

'ஸ்ரீ தேவி மூவிஸ்' நிறுவனம் தயாரிப்பில் சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'யசோதா'. இப்படத்தை ஹரிஷங்கர் மற்றும் ஹரிஷ்நாராயணன் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர். இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மணிசர்மா இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. ட்ரைலரை பார்க்கையில், வாடகைத்தாயாகக் குழந்தைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு பெண்மணி வாழ்க்கையைப் பற்றி கூறுவது போல் தெரிகிறது.

Advertisment

இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு, தான் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடையப் போராடி வருவதாக நடிகை சமந்தாதெரிவித்திருந்தார். இது பலருக்கும் அதிர்ச்சியைஅளித்தது. மேலும் இது தொடர்பாக திரை பிரபலங்கள் பலரும் சமந்தாவுக்கு ஆறுதல் கூறினர்.

Advertisment

இந்நிலையில், யசோதா படம், வருகிற 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படத்திற்கானப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் சமந்தா. அதன் ஒரு பகுதியாக சமீபத்திய பேட்டியில் தனது உடல்நலம் குறித்து உருக்கமாகப் பேசியுள்ளார். அவர் பேசியது, "என் வாழ்க்கையில் சில நாட்கள் நல்லதாக இருந்தன.சில நாட்கள் கெட்டதாக அமைந்தன. ஆனால் பல துன்பங்களைத்தாண்டி இவ்வளவு தூரம் கடந்து வந்துவிட்டேன் என நினைக்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

என் மீது நீங்கள் காட்டிய அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. இது ஒரு போர்க்களம். இதில் சண்டையிடுவதற்கான வலுவை நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள். உடல் நலத்தில் எனக்கு இப்போது நல்ல முன்னேற்றம் இருக்கிறது. ஆனால், உயிருக்கு ஆபத்தான நிலையில் நான் இல்லை. அதனைத்தெளிவுபடுத்த விரும்புகிறேன். அது போன்று வெளியாகும் செய்திகள் தேவையற்றது." எனக் கண்கலங்கியபடி பேசியுள்ளார்.

Disease yashoda samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe