Advertisment

மீண்டும் மருத்துவமனையில் சமந்தா

Advertisment

Samantha  hospitalised again

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த ஆண்டு அக்டோபரில் மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில், சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய சமந்தா கடந்த பிப்ரவரி முதல் மீண்டும் பழையபடி படம் நடிக்கத் தொடங்கினார்.

Advertisment

அந்த வகையில்,விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்த குஷி படம் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியானது. மேலும் 'சிட்டாடெல்' வெப் தொடர் ஒன்றைக் கைவசம் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இதனிடையே சினிமாவிலிருந்து தற்போது விலகி இருக்கும் சமந்தா, சுவிட்சர்லாந்து, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். அமெரிக்காவில் தனது தசை அலர்ஜி பூரண குணமடைய சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில், சமந்தா மீண்டும் மருத்துவமனையில் இருப்பது போல் ஒரு புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். உடல் நலம் தேறுவதற்காக ஒரு முயற்சியை மேற்கொண்டுள்ளது போல் தெரிகிறது. மருத்துவர் கண்காணிப்பில் இருக்கும் தனது புகைப்படத்தை பகிர்ந்த அவர், மற்றொரு பதிவில் தனக்கு என்ன ஆனது எனவும் பதிவிட்டிருந்தார். மேலும் தான் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தோல் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறியிருந்தார்.

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Subscribe