Advertisment

வெப் தொடருக்காக புதிய முயற்சி எடுத்த சமந்தா

Samantha has made a new venture for a web series

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வளம் வரும் சமந்தா தமிழில் கடைசியாக 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து தெலுங்கில் தற்போது 'சாகுந்தலம்', 'யசோதா' மற்றும் 'குஷி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதில் 'யசோதா' படம் தமிழ், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வருகிற 12-ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Advertisment

இதனிடையே இந்தியில் கடந்த ஆண்டு வெளியான ‘தி பேமிலிமேன் 2' வெப் சீரிஸில் நடித்திருந்தார். இந்த சீரிஸை ராஜ் மற்றும் டீகே இயக்கியிருந்தார். இந்நிலையில் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் உருவாகும் ஒரு வெப் சீரிஸில் மீண்டும் சமந்தா நடிக்கவுள்ளார். வருண் தவான் கதாநாயகனாக நடிக்கவுள்ள இந்த சீரிஸில் ஆக்ஷன் காட்சிகள் அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் அமெரிக்காவைச் சேர்ந்த சண்டை இயக்குநர் ஒருவரிடம் தற்காப்புக் கலை பயிற்சி மேற்கொண்டு வருகிறார் சமந்தா. இவரோடு வருண் தவானும் பயிற்சி மேற்கொள்கிறார்.

Advertisment

அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள இந்த சீரிஸ், ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் பிரியங்கா சோப்ரா உட்பட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சிட்டாடல்’ என்ற அமெரிக்க வெப் சீரிஸின் இந்திய வடிவம் என்பது குறிப்பிடத்தக்கது.

Bollywood samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe