samantha hand injury while workout

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் சமந்தா படப்பிடிப்புகளில் கலந்துகொள்ள முடியாமல் போனது. பின்பு நோயின் காரணமாக பூரண குணமடையும் வரை சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகியிருக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது.

Advertisment

இதனைத் தொடர்ந்து சற்று உடல்நலம் தேறிய சமந்தாபொது வெளியில் வரத்தொடங்கினார். முழுமையாக பூரண குணமடைய வேண்டி சமீபத்தில் பழனி முருகன் கோவிலில் 600 படிகள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தார்.அவர் குணமடைய அவரது ரசிகர்களும் பிரார்த்தனை செய்து வருகின்றனர். சமந்தா நடிக்க வந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது. இது தொடர்பாக பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில் “உங்கள் அன்புதான் இவ்வளவு தூரம்வந்து நிறுத்தியுள்ளது”என நெகிழ்ச்சியுடன் சமந்தா நன்றி தெரிவித்திருந்தார்.

Advertisment

இதனிடையே உடற் பயிற்சியில் தீவிரம் காட்டி வரும் சமந்தா மீண்டும் பழையபடி படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார். அந்த வகையில் தற்போது வருண் தவான் நடிப்பில் உருவாகும் 'சிட்டடேல்' வெப் சீரிஸில் நடித்து வருகிறார். விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தனது கைகளில் காயம் ஏற்பட்டுள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் மீண்டும் சமந்தாவிற்கு சரியாகி வரவேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.