/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/E9OBtS3VoAEwO_T.jpg)
நடிகை சமந்தா நடித்த ‘தி ஃபேமிலி மேன் 2’ என்ற சர்ச்சைக்குரிய வெப் தொடர் சென்ற ஜூன் மாதம் அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. அதில் சமந்தா தமிழீழப் போராளியாக நடித்துள்ளார். இது ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், இந்தப் படத்துக்கு தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1f_8.jpg)
இந்த நிலையில் மெல்போர்ன் இந்திய திரைப்பட விருது விழாவில் 'தி பேமிலி மேன் 2' வெப்தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகையாக நடிகை சமந்தா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த செய்தி சமந்தா ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)