Advertisment

கஷ்டப்படும் ஆட்டோ டிரைவருக்கு கார் வாங்கிக் கொடுத்த சமந்தா!

veagagvsad

நடிகை சமந்தா தற்போது விஜய் சேதுபதி, நயன்தாராவுடன் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடித்து வரும் நிலையில், தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில், ‘சாம் ஜாம்’ என்ற நிகழ்ச்சியையும் சமந்தா தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பேட்டியளித்து வரும் நிலையில், சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், "தனக்கு ஏழு சகோதரிகள் இருப்பதாகவும், பெற்றோர்கள் இறந்துவிட்டதால் ஆட்டோ ஓட்டி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தன் குடும்பத்தைக் காப்பாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Advertisment

bfcndfnd

அந்தப் பெண்ணின் வாழ்க்கைபோராட்டத்தைக் கேட்டு தெரிந்து கொண்ட சமந்தா, அவர்களுக்கு உதவி செய்வதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். இந்த நிலையில், தான் சொன்னபடி தற்போது அந்த ஆட்டோ ஓட்டுநருக்கு ரூ.12.5 லட்சம் செலவில் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார் நடிகை சமந்தா. ஆட்டோ ஓட்டி கஷ்டப்படும் ஏழைப் பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு சமந்தா செய்த இந்த உதவியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். இது தற்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.

Advertisment

samantha
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe