Advertisment

“அதுபோன்ற கதாபாத்திரங்களில் பார்த்தே பழக்கப்பட்டவர்களுக்கு இது ஆச்சரியமாக இருக்கும்” - சமந்தா!

samantha

அமேசான் ப்ரைமில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய இந்திய வெப் சீரிஸ்,'தி ஃபேமிலி மேன்'. இதில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இந்தத் தொடரை ராஜ் மற்றும் டிகே உள்ளிட்ட இரண்டு இயக்குனர்கள் இணைந்து இயக்கியிருந்தனர்.

Advertisment

முதலாவது சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து, இரண்டாவது சீஸனை உருவாக்க அமேசான் ப்ரைம் திட்டமிட்டிருந்தது. இதில், நடிகை சமந்தாவும் முக்கிய ரோலில் நடிக்கிறார். நேரடியாக ஓ.டி.டியில் சமந்தா நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்நிலையில், இதுகுறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ள சமந்தா, "விதிகளை உடைக்கும் வாய்ப்பை ஓ.டி.டி எங்களுக்கு வழங்குகிறது. 'தி ஃபேமிலி மேன்' தொடரில் நான் பல விதிகளை உடைத்திருக்கிறேன். புத்தம் புதிதாகப் பல விஷயங்களைப் பரிசோதித்துப் பார்த்திருக்கிறேன். இந்த சீஸனில் நடித்ததிலும், அதன் இறுதி வடிவத்தைப் பார்த்ததிலும் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருக்கிறேன். என்னை ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் பார்த்துப் பழக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் இது ஒரு நல்ல ஆச்சரியமாக இருக்கும்.

ஓ.டி.டி ஒவ்வொரு கலைஞருக்கும் புதிய சாத்தியங்கள் நிறைந்த உலகத்தை அறிமுகம் செய்துள்ளது. திரைப்படங்கள் என்று வரும்போது ஒரு நடிகர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும்படியான குறிப்பிட்ட வகையான கதாபாத்திரங்களிலேயே நடிக்க வேண்டியிருக்கும். ஆனால், ஓ.டி.டியில் பரிசோதனைகள் செய்து பார்க்க முடியும்" என்று கூறியுள்ளார்.

samantha
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe