நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது மறைந்த முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படமான 'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்திரியாக நடித்து வருகிறார். நடிகர் துல்கர்சல்மான் ஜெமினி கணேசனாக நடிக்கும் இப்படத்தில் சமந்தா பத்திரிகை நிருபராக நடிக்கிறார். மதுரவாணி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் நாக் அஸ்வின் இயக்கும் இப்படத்தில் சாவித்திரியின் பல வெற்றி படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றிய அலூரி சக்ரபாணி கதாபாத்திரத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். மறைந்த பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஷ்வரராவ் கதாபாத்திரத்தில் நாக சைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் நடிக்கின்றனர்.
ரசிகர்களை கவரும் சமந்தாவின் புதிய தோற்றம்
Advertisment