/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Actress-Samantha-Latest.jpg)
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் இயக்குனர் பொன்ராமுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் சீமராஜா. இதில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நெப்போலியனும், முதல்முறையாக வில்லியாக சிம்ரனும் நடிக்கிறார்கள். மேலும் நாயகியாக நடிகை சமந்தா நடிக்கிறார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிக்கும் இரண்டாவது படம் இதுவாகும். மேலும் இவர் நடிப்பில் உருவான இரும்புத்திரை படம் ரிலீசுக்கு தயராக உள்ள நிலையில் தற்போது நடித்துள்ள சீமராஜாவில் சமந்தா சம்மந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் இவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகயுள்ளதால் ரசிகர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)