தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் சமந்தா, மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டதால் அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இவரது நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வந்த சிட்டாடெல் வெப் தொடர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றது. இதில் ஆக்ஷன் காட்சிகளிலும் கவர்ச்சியான காட்சிகளிலும் நடித்திருந்தார். இது அவரை மீண்டும் லைம் லைட்டுக்கு கொண்டு வந்தது. இந்த தொடரின் வெற்றியை மும்பையில் படக்குழு கொண்டாடியது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில் சமந்தாவின் தந்தையார் ஜோசஃப் பிரபு காலமாகியுள்ளார். இது தொடர்பாக சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக மனமுடைந்து ஒரு பதிவை பகிர்ந்துள்ளார். இவரது தந்தை தெலுங்கு ஆங்லோ இந்தியன் என கூறப்படுகிறது. ஜோசஃப் பிரபுவின் மறைவு சமந்தா குடும்பத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சமந்தாவிற்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஆறுதல் கூறி வருகின்றனர்.