/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Samantha New Stills (2).jpg)
ராம்சரண் தேஜா, சமந்தா இணைந்து நடித்துள்ள ரங்கஸ்தலம் தெலுங்கு படம் வெளியான நாள் முதலே வசூலை வாரி குவித்து வருகிறது. இதில் சமந்தாவின் நடிப்பு நன்றாக பேசப்பட்ட நிலையில் அவர் தமிழை தொடர்ந்து தற்போது தெலுங்கு படங்களிலும் சொந்த குரலில் டப்பிங் பேச ஆரம்பித்திருக்கிறார். ரங்கஸ்தலத்தில் சொந்த குரலில் பேசியதையடுத்து நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கும் மஹாநதி தெலுங்கு படத்தில் சமந்தா நிருபர் வேடத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது இந்த படத்துக்காகவும் அவர் சொந்த குரலில் டப்பிங் பேசி இருக்கிறார். இவர் ஏற்கனவே தமிழில் 'நீதானே என் பொன் வசந்தம்' படத்திலிருந்து சொந்த குரலில் பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2018-02/25520166_1989059468016271_1652769857_n.jpg)