/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/1880.jpg)
யசோதா, சாகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ள சமந்தா, தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக ‘குஷி’ எனும் படத்தில் நடித்து வருகிறார். ரொமான்டிக் கலந்த காமெடி படமாக உருவாகி வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தென்னிந்திய மொழிகளில் பிரபலமாக இருக்கும் சமந்தா, தற்போது இந்தி திரையுலகில் கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
அதன்படி பாலிவுட் இயக்குநர் அமர் கௌசிக் இயக்கும் புதிய படத்தில் ஆயுஷ்மான் குரானாவுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்தில் சமந்தா இரண்டு வேடங்களில் நடிக்கவுள்ளாராம். அதில் ஒன்று இளவரசி கதாபாத்திரம் என்றும், மற்றொன்று பேய் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. அதற்காக தன்னை முழுவதுமாக தயார்படுத்திக்கொள்ள சமந்தா பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு முன்பு பாலிவுட் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கத்தில் வெளியான ‘தி ஃபேமிலி மேன் 2’ வெப் தொடரில் சமந்தா நடித்திருந்தார். இத்தொடர் வெளியாகி பெரும் விமர்சனத்தையும், எதிர்ப்பையும் சம்பாதித்த நிலையில், சமந்தாவின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதையடுத்து ‘தி ஃபேமிலி மேன்’ தொடரின் இயக்குநர்கள் ராஜ் மற்றும் டீகே இயக்கும் மற்றொரு வெப் தொடரில் வருண் தவானுடன் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)