/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/o_1.jpg)
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் 'புஷ்பா' படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, ஃபகத் பாசில் ஐபிஎஸ் அதிகாரியாக நடித்திருந்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தில் நடிகை சமந்தா ஓ சொல்றியா என்ற குத்து பாடலுக்கு நடனமாடி இருந்தார். இப்பாடலுக்கு ஒரு பக்கம் எதிர்ப்புகள் கிளம்பினாலும் மறுபக்கம் சினிமா ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர்.
இந்நிலையில் நடிகை சமந்தா 'ஓ சொல்றியா..." பாடலை போன்று மற்றுமொரு பாடலுக்குக்கும் நடனமாட ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் 'லைகர்' படத்தில் நடிகை சமந்தா குத்து பாடல் ஒன்றுக்கு நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)