Advertisment

விழா மேடையில் அழுத சமந்தா - வைரலாகும் வீடியோ

samantha crying at Shaakuntalam trailer launch

சமந்தா நடிப்பில் குணசேகர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சாகுந்தலம்'. காளிதாசர் எழுதிய புராணக் கதையான சாகுந்தலையின் காதல் கதையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. சமந்தா சாகுந்தலையாகவும் தேவ் மோகன் துஷ்யந்தனாகவும் நடித்துள்ளனர். மேலும், அதிதி பாலன், அனன்யா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 3டியில் வெளியாகவுள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

Advertisment

இப்படம்அடுத்த மாதம் 17 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து படத்தின் ட்ரைலர்வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. சமீப காலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சமந்தா சிறிது இடைவெளிக்கு பிறகு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

Advertisment

இந்த விழாவில், சமந்தா சமீபத்திய வாழ்க்கைப் போராட்டங்களுக்கு மத்தியில் சினிமா மீதான தனது காதல் எப்படி மாறவில்லை என்பதைப் பற்றி பேசினார். மேலும், இந்த நிகழ்வில் பங்கேற்க தனது முழு தைரியத்தையும் திரட்டி வந்துள்ளதாகத்தெரிவித்தார். இதனிடையே படத்தின்இயக்குநர் குணசேகர் படம் உருவான விதம் பற்றியும்படக்குழு சந்தித்தசிக்கல் குறித்தும் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரெனசமந்தா அழத் தொடங்கிவிட்டார். தொடர்ந்து அழுது கொண்டிருந்த சமந்தாவைபார்த்து அரங்கத்தில் இருந்த அனைவரும் சமந்தா அழாதீர்கள் என்று கூச்சலிட்டனர். பின்பு அருகில் இருந்தவர்கள் சமந்தாவை சமாதானப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சமந்தா, அதிலிருந்து முழுமையாகக் குணமடைந்தவுடன் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும், நடிப்பிலிருந்து சிறிதுகாலம் விலகியிருப்பதாகவும் சொல்லப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமந்தாவைபார்க்கையில் பழையபடி மீண்டும் உடல் தேறி வருவதாகத்தெரிகிறது.இதே போல் சமந்தாவின் முந்தைய படமான 'யசோதா' பட ப்ரமோஷன் நிகழ்ச்சியிலும் சமந்தா கண்கலங்கியதுகுறிப்பிடத்தக்கது. தொடர்ந்து நிகழ்ச்சிகளில்கண்கலங்கி வரும் சமந்தா விரைவில் பூரண குணமடையஅவரது ரசிகர்கள் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர்.

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe