தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. கடந்த 2017 அக்டோபர் மாதத்தில் நடிகர் நாக சைத்தன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்துகொண்டார்.

Advertisment

samantha

திருமணம் முடிந்த பின்னர் சமந்தா திரைப்படங்களில் நடிக்க மாட்டார் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சமந்தா அதன்பின் தான் ஹீரோயின் செண்ட்ரிக் படங்களில் நடிக்க தொடங்கினார். தற்போதும் தெலுங்கு தமிழ் திரையுலகில் பிஸியாக வலம் வந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் சமந்தா கர்ப்பமாக இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரங்களில் வதந்தி ஒன்று கிளம்பியுள்ளது. சமந்தாவின் ட்விட்டரில் அவருடைய பெயர் பேபி அகினேனி என்று மாற்றியுள்ளதுதான் இந்த வதந்திக்கு காரணம். இதை வைத்து பலரும் சமந்தா கர்ப்பமாக இருக்கிறார் என்று செய்திகள் போட கடுப்பான சமந்தா.

‘சமந்தா கார்ப்பமாக இருக்கிறாரா?’ என்று ஒருவர் பதிவிட்ட செய்திக்கு, “நான் கர்ப்பமாக இருக்கனா? எப்போது அதை நீங்கள் கண்டுபிடித்தீர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள்” கமெண்ட் செய்துள்ளார் சமந்தா.

Advertisment

சமந்தா நடிக்கும் ‘ஓ பேபி’ படத்தை புரோமோட் செய்வதற்காகத்தான் ட்விட்டரில் பெயர் மாற்றம் செய்திருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், அதை சிலர் தவறாக புரிந்துகொண்டு இதுபோன்ற வதந்தியை பரப்பி வருகின்றனர்.