pi.jpg

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரும் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனுமான நாக சைதன்யாவைகடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்து மத வழக்கத்தின்படியும் கிறிஸ்தவ மத வழக்கத்தின்படியும் இவர்களது திருமணம் நடந்தது. சமூக வலைதளங்களில் ‘சமந்தா ரூத் பிரபு’ என்ற பெயரில் இயங்கிவந்த சமந்தா, திருமணத்திற்குப் பிறகு நாக சைதன்யாவின் குடும்பப் பெயரான அக்கினேனியை சேர்த்து ‘சமந்தா அக்கினேனி’ என்ற பெயரில் இயங்கிவந்தார்.

Advertisment

இந்நிலையில், தற்போது சமூக வலைதளங்களில் தன் பெயரை வெறும் எஸ் (S) என்று சமந்தா மாற்றிக்கொண்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் விவாத பொருளானது. நாக சைதன்யாவும் சமந்தாவும் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்றுபரவலாகப் பேசப்பட்டது. ஆனால், ‘சகுந்தலம்’ என்ற திரைப்படத்தில் நடிப்பதால்தான் பெயரை மாற்றியிருக்கிறார் என்ற காரணமும் ரசிகர்களால் சொல்லப்பட்டது. இருப்பினும், ‘திரைப்படங்களில் நடிப்பதிலிருந்து சில ஆண்டுகள்ஓய்வெடுக்கப் போகிறேன்’என அண்மையில் ஒரு பேட்டியில் சமந்தா பேசியிருந்ததும் விவாகரத்து வதந்தியை அதிகம் பரப்பியது.

Advertisment

இந்த நிலையில், விவாகரத்து வதந்திகளுக்கு ஒரு ட்வீட் மூலம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் சமந்தா. இன்று (29.08.2021) பிறந்தநாள் கொண்டாடும் தன் மாமனார் நாகார்ஜுனாவுக்கு வாழ்த்து சொல்லியதன் மூலம், தன்னுடைய விவாகரத்து வதந்திகளைப் பொய்யாக்கியுள்ளார் சமந்தா. தன்னுடைய ட்விட்டர் பதிவில், “உங்கள் மீதான எனது மரியாதையை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. என்றும் எப்போதும் உங்களுக்கு மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் நிறைந்திருக்க வாழ்த்துகிறேன் மாமா” என்று குறிப்பிட்டுள்ளார் சமந்தா.

அண்மையில், ‘தி ஃபேமிலி மேன் 2’ தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகை விருதை சமந்தா பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisment