
அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் யாராவது மற்றொரு பிரபலத்திற்கு சேலஞ்சுகள் விடுவது வழக்கமான ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் தற்போது திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் மரம் நடுவதைச் சவாலாக விடுத்து வருகின்றனர்.
தெலங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று மரம் நடும் ‘கிரீன் இந்தியா சேலஞ்ச்’ என்ற ஒன்றைத் தொடங்கி வைத்தார். இதை நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் ஏற்று மரம்நட்டனர். இதன் தொடர்ச்சியாக நடிகர் நாகார்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்தார். அவரது சவாலை ஏற்று நடிகை சமந்தாவும் மரக்கன்றுகளை நடும் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் மற்றும் ராஷ்மிகா மந்தானா, ஷில்பா ஆகியோருக்கு மரக்கன்றுகளை நடும் சேலஞ்சை செய்திருக்கிறார் சமந்தா.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)