“நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை” - சமந்தா பதிலடி

samantha bathdub photo issue

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.சென்னை பல்லாவரத்தைச் சேர்ந்தவரான இவர், விஜய், சூர்யா, அல்லு அர்ஜூன், சிம்பு மற்றும் நானி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து புகழ்பெற்றவர். கடந்த 2010 ஆம் ஆண்டு 'விண்ணைத் தாண்டி வருவாயா' தெலுங்கு ரீமேக்கில் கதாநாயகியாக அறிமுகமான சமந்தா, தொடர்ந்து பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்தார்.

சமீபகாலமாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதிலிருந்து மீண்டு வருவதற்காக கடந்த 8 மாதங்களுக்கு மேல் சிகிச்சைப் பெற்று வருகிறார். அதனால் சிறிய காலத்திற்கு சினிமாவிலிருந்து விலகியிருந்த சமந்தா, கடந்த டிசம்பர் மாதம் டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக அறிவித்தார். இதையடுத்து மீண்டும் நடிப்பிற்கு திரும்புவதாகத் தெரிவித்திருந்தார். அதே நேரம், இடைப்பட்ட நேரங்களில் வெளிநாடுகளுக்கு சென்று அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில், தற்போது கிரீஸ் நாட்டின் ஏதென்ஸ் மாகாணத்தில் இருக்கும் சமந்தா.. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை போட்டிருக்கிறார். அதில், மயோசிடிஸ் நோய்க்காக நியர் இன்ஃப்ராரெட் சுனா' என்ற சிகிச்சையை எடுத்து கொண்டதாகவும், அதன் பலன்கள் இவை என்றும் அந்த ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய சூழலில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்.. மற்றொரு புகைப்படத்தை வெளியிட்டு, அதை உடனடியாக நீக்கியதாக சமூக வலைத்தளங்களில் சிலர் பரப்பி வருகின்றனர். அதில், குளியலறை தொட்டியில் தலை மறைக்கப்பட்ட நிர்வாண போட்டோவை வெளியிட்டு அது சமந்தா தான் எனக் கூறி வந்தனர். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வந்த நிலையில்பலரும் சமந்தா குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தனர். இருந்தபோதிலும் சமந்தாவின் ரசிகர்கள் இது மார்ப்டு (Morphed) செய்யப்பட்ட புகைப்படம் என விளக்கம் கொடுத்தும், அதனை ஏற்காமல் தொடர் விமர்சனங்கள் வெளியாகின. ஆனால், உண்மையான புகைப்படம் வெளியாகி அனைவரும் அமைதியாக்கியது.

ஆபாச பட நடிகையான வீனஸ் வலென்சியாவின் படத்தை வைத்து முகத்தை கட் செய்து டோனிங் செய்திருப்பது தெரியவந்தது. ஆனால், சமந்தாவின் இன்ஸ்டா பக்கத்தில் இதனை யார் வெளியிட்டது என்பது இன்னும் தெரியவில்லை. இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ள நிலையில், இது குறித்து சமந்தா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் , "நான் யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை" என்று லீக்கான புகைப்படத்திற்கு மறைமுகமாக பதிலடி கொடுத்து இருக்கிறார். ஏற்கெனவே நடிகை ராஷ்மிகாவின் டீப் பேக் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி பெரும் புயலை கிளப்பியது. இதற்கிடையில், நடிகை சமந்தா தனக்கு உள்ள உடல் உபாதைக்கு பிரத்தியேக மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டதை தான் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார். அதே நேரத்தில், அவர் வேறு எந்தவித புகைப்படத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Subscribe