/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/29_19.jpg)
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் 'பீஸ்ட்' படத்தில் நடித்துள்ளார். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர்முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தைசன் பிக்சர்ஸ்நிறுவனம் தயாரிக்கிறது. இறுதிக்கட்ட பணிகளில் கவனம் செலுத்தி வரும் படக்குழு, ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியாகும் என அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான 'பீஸ்ட்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பல சாதனைகளை படைத்துள்ள இப்பாடல் தற்போது வரை யூட்யூப் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இப்பாடலில் விஜய் நடனம் பலரையும் கவர்ந்து வருகிறது. ரசிகர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை இப்பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில்விஜய்யின் அரபிக் குத்து பாடலுக்கு நடிகை சமந்தா நடனமாடி ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)