Samantha apologized to Vijay Devarakonda fans

Advertisment

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சமீப காலமாக தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தார். இதனால் சமந்தா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ளாமல் போக, அவர் ஒப்பந்தமாகியுள்ள படங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. குறிப்பாகவிஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடித்து வந்த'குஷி' படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் நிறைவடைந்த நிலையில் சமந்தாவின் வருகைக்கு காத்திருந்தார்கள்.

இதனிடையே நோயின் காரணமாக பூரண குணமடையும் வரை சினிமாவிலிருந்து சிறிது காலம் விலகி இருக்க முடிவெடுத்துள்ளதாகத்தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து சற்று உடல்நலம் தேறி பொது வெளியில் வரத்தொடங்கிய சமந்தா, அவர் நடித்த'சாகுந்தலம்' படத்தின்ட்ரைலர்வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது படக்குழுவினர் படத்துக்காக சமந்தா பட்ட கஷ்டத்தை விவரிக்க, மேடையிலேயேகண் கலங்கினார் சமந்தா. இப்படம் வரும் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இப்போது மீண்டும் பழையபடி படங்களில் நடிக்கத்தொடங்கி விட்டார் சமந்தா. அந்த வகையில் வருண் தவான் நடிப்பில் உருவாகும் 'சிட்டடேல்' வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இத்தொடரின் சமந்தாஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. பழையபடி நடிக்க தொடங்கிய சமந்தா சமூக வலைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களின்கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் ரசிகர் ஒருவர்விஜய் தேவரகொண்டாவுடன் அவர் நடிக்கும்'குஷி' படத்தின் நிலை குறித்து கேள்வி கேட்க அதற்கு பதிலளித்துள்ளார் சமந்தா. அவர் கூறுகையில், "குஷி படம் விரைவில் தொடங்கப்படும்.விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் என்னை மன்னியுங்கள்" என குறிப்பிட்டுள்ளார். எனவே விரைவில்குஷிபடத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.