Advertisment

samantha alcohol promotional video controversy

திரைத்துறையில் பிரபலமான நடிகர்கள் தனியார் நிறுவனத்திற்காக அவர்களின் பொருட்களை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்த விளம்பரப் படங்களில் நடிப்பது வழக்கம். அதற்காக சம்பளத்தையும் நடிகர்கள் கோடியில் வாங்கி கொண்டிருக்கின்றனர். இதேபோன்று திரைப்பிரபலங்கள் சமூக வலைதளத்தின் மூலமும்விளம்பரம் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களில் திரைப்பிரபலங்கள் செய்யும் விளம்பரங்களுக்கு, அவர்களின் ஃபாலோவர்களைகணக்கிட்டு ஊதியம் கொடுக்கப்பட்டு வருகிறது.

Advertisment

அந்த வகையில்தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவைஇன்ஸ்டாகிராமில் 22.5 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர். இதன் மூலம் பல்வேறு பொருட்களுக்கு விளம்பரம் செய்து வந்த சமந்தா சமீபத்தில் மதுபான விளம்பரத்தில் நடித்த அந்த வீடியோவைதனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. ரசிகர்களை மதுபானம் குடிக்கத்தூண்டுவதா?, திரைப்படங்களில் சிகரெட், மதுபானம் குடிக்கும் காட்சிகள் வரும்போது கூடவே எச்சரிக்கை வாசகங்கள் இடம் பெற்றிருக்கும். அப்படி இருக்கையில் நீங்கள் இப்படி மதுபானத்தை விளம்பரப்படுத்தலாமா...? என நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.