யு டர்ன் அடிக்கும் சமந்தா

sam

அனுஷ்கா, நயன்தாரா, திரிஷாவை தொடர்ந்து தற்போது சமந்தாவும் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள புதிய நடிக்கிறார். இவர் நடிப்பில் 'இரும்புத்திரை' படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்ற நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ஜோடியாக 'சீமராஜா' படத்திலும், ராம் சரண் ஜோடியாக 'ரங்கஸ்தலம்' படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களையடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கன்னடப்படமான 'யு-டர்ன்' தமிழ் ரீமேக்கில் தற்போது சமந்தா நடிக்கத் துவங்கியிருக்கிறார். இப்படத்தில் படத்தில் நடிகர் ஆதி போலீசாகவும், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் இளம் பத்திரிக்கை நிருபராக சமந்தாவும் நடிக்க இருக்கிறார். அடுத்தடுத்து நடக்கும் கொலைகள் குறித்த துப்பறியும் கதாபாத்திரத்தில் சமந்தா நடிக்கிறார். சமந்தாவின் காதலராக ராகுல் ரவீந்திரன் நடிக்கிறார்.

இதையும் படியுங்கள்
Subscribe