samantha act with karthi starring sathish selvakumars movie

Advertisment

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் 'பொன்னியின் செல்வன்' மற்றும் முத்தையா இயக்கத்தில் உருவாகி வரும் 'விருமன்' ஆகிய படங்களில்நடித்து முடித்துள்ள கார்த்தி தற்போது இயக்குநர்மித்ரன் இயக்கும் 'சர்தார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தைபிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் கார்த்தி அடுத்ததாக பேச்சிலர் படத்தை இயக்கிய சதீஸ்செல்வகுமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்திக்குஜோடியாக நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில் இறுதியாக நடிகை சமந்தா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவல் உறுதியாகும் பட்சத்தில், இப்படத்தின் மூலம் இருவரும் முதல் முறையாக இணைய உள்ளதுகுறிப்பிடத்தக்கது.