Advertisment

அதிர்ச்சிதரும் புள்ளிவிவரம் - மறுமணம் குறித்து சமந்தா பதில்

samantha about second marriage

Advertisment

சமந்தா சமீப காலமாக சினிமாவில் இருந்து விலகியிருந்தார். தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், அது பூரண குணமடைய தொடர்ந்து பல்வேறு சிகிச்சைகள் மேற்கொண்டு வருகிறார். கடைசியாக விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்திருந்தார். தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் 'சிட்டாடெல்' வெப் தொடர் வைத்துள்ளார். இதன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். இந்த நிலையில் ரசிகர்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார் சமந்தா. அவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அந்த வகையில் ரசிகர் ஒருவர், மறுமணம் குறித்து சிந்திக்கவில்லையா என கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்த சமந்தா, “புள்ளிவிவரங்களின்படி அது ஒரு தவறான முடிவாக இருக்கும்” என பதிலளித்துள்ளார். மேலும் ஒரு 2023 ஆண்டின் விவாகரத்துடன் கூடிய புள்ளி விவரங்களை இணைத்துள்ளார். அதில் முதல் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து 50 சதவீதம் இருப்பதாகவும், இரண்டாம் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து மற்றும் மூன்றாம் திருமணம் செய்தவர்களின் விவாகரத்து முறையே67 சதவீதம் மற்றும் 73 சதவீதம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார் சமந்தா. பின்பு 2021 ஆம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக இருவரும் அறிவித்தனர். அதன்படி இருவரும் தற்போது பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர் என்பது நினைவுகூரத்தக்கது.

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Subscribe