Advertisment

"25 கோடியா" - பதிலடி கொடுத்த சமந்தா

samantha about her treatment

தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த ஆண்டு அக்டோபரில் மயோசிடிஸ் (Myositis) எனும் தசை அலர்ஜி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இது திரையுலகில் பலருக்கும் அதிர்ச்சியளித்த நிலையில் சிகிச்சை பெற்று உடல்நலம் தேறிய சமந்தா கடந்த பிப்ரவரி முதல் மீண்டும் பழையபடி படம் நடிக்கத் தொடங்கினார்.

Advertisment

அந்த வகையில் விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' மற்றும் வருண் தவானின் 'சிட்டாடெல்' வெப் தொடர் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இரண்டு ப்ரொஜெக்டின் படப்பிடிப்புகளும் முடிந்துள்ளது. இதில் 'குஷி' படம் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 'சிட்டாடெல்' தொடர் முழுவீச்சில் தயாராகி வருகிறது.

Advertisment

இதனிடையே சினிமாவிலிருந்து 1 வருடம் விலகி இருப்பதாக தகவல் வெளியானது. மேலும்அந்த இடைவெளியில் உடல்நலத்திற்காக கூடுதல் சிகிச்சை எடுக்கவுள்ளதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த மாதம் சிட்டாடெல் தொடரின் படப்பிடிப்பை முடித்துள்ளதாக கூறிய அவர், "என்ன வரப்போகிறது என்பதை நீங்கள் அறிந்தால், ப்ரேக் எடுப்பது ஒரு மோசமான விஷயம் கிடையாது" எனத்தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி தொடர்ந்து கோயம்புத்தூர், வேலூர் எனத்தொடங்கி தற்போது இந்தோனேசியாவில் இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் வைரலாகின. இந்நிலையில், தனது சிகிச்சைக்காக ஒரு முன்னணி தெலுங்கு நடிகரிடம் ரூ.25 கோடி கடன் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் உலா வந்து கொண்டிருந்தன.

இதையடுத்து இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் விளக்கம் அளித்துள்ளார். அதில், "மயோசிடிஸ் நோய்க்காக ரூ.25 கோடியா?. யாரோ உங்களுக்கு ஒரு மோசமான தகவலை கொடுத்துள்ளனர். அதில் மிக சிறிய பகுதி மட்டும் தான் செலவழித்து வருகிறேன். மேலும், எனது தொழில் வாழ்க்கையில் நான் செய்த அனைத்து வேலைகளுக்கும் பளிங்குக் கற்களால் சம்பளம் கொடுக்கப்பட்டதாக நான் நினைக்கவில்லை. நான் என்னை ஈசியாக பார்த்து கொள்வேன். மயோசிடிஸ் என்பது ஆயிரக்கணக்கானோர் அவதிப்படும் ஒரு நிலை. அதனால் வெளியிடும் தகவல்களுக்கு பொறுப்பை ஏற்று கொள்ளுங்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

samantha Ruth Prabhu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe